ஸ்ரீ பாரதிய ஜோதிர்யஸ்து விக்யான் சன்ஸ்தா அமராவதி சாஸ்த்ர பண்டித சத்கரம் – Sadas

ஸ்கந்த கிரி, செகந்திராபாத் முகாம், 10/01/2024

முக்கியமானது வேதம். வேதத்தை தோஷம் அணுகாது. அக்னி ஶ்ரிஸ்டியின் காரணம், அனைத்தையும் புனிதப் படுத்தவே. வேதம், அத்யாயணம் செய்பவர்கள், பசுக்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.

கீழ்கண்ட மந்திரத்திற்கு அருமையான விளக்கம் தந்தார்கள்:

मतुवाता रुतायते मतुक्षरन्ति सिन्तव: |  

मात्वीर्न:सन्त्वोषती: ||

मतु नक्तमुतोषसि मतुमत्पार्तिवम् रज: |  

मतुत्यौरस्तु न: पिता ||

मतुमान्नो वनस्पतिर्मतुमाम् अस्तु सूर्य: |  

मात्वीर्कावो पवन्तु न: ||

மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: | 

மாத்வீர்ந:ஸந்த்வோஷதீ: ||

மது நக்தமுதோஷஸி மதுமத்பார்திவம் ரஜ: | 

மதுத்யௌரஸ்து ந: பிதா ||

மதுமாந்நோ வநஸ்பதிர்மதுமாம் அஸ்து ஸூர்ய: | 

மாத்வீர்காவோ பவந்து ந: ||

மது, மாதூரியம் பற்றி விளக்கினார். இயற்கை நமக்கு அனைத்தும் நல்லதை செய்ய வேண்டும் என்று வேண்டி, நமது சனாதனம் எவ்வாறு இயற்கையோடு ஒன்றியத்தை விளக்கினார்.

மந்திரத்தின் பொருள்:

மந்த்ர தாத்பர்யம் : – காற்று இனிமையாக வீசட்டும்

நதிகள் இனியவைகளாக ஓடட்டும், 

மகத்துவம் கொண்ட மூலிகைகள் நமக்கு இன்பம் தருபவைகள் ஆகுக, 

இரவிலும் பகலிலும் இனிமையே நிறைந்திருக்கட்டும், நிலத்தின் புழுதியும் இன்பம் பொலிக

நம் தந்தையாகிய வானுலகில் இன்பம் ஓங்குக

கனி கொடுக்கும் மரங்களில் இன்பம் ததும்புக. 

சூரியன் இன்பத்தை தோற்றுவிப்பானாக,சாந்தமான பசுக்களினின்று நமக்கு இன்பம் சுரப்பதாகுக.

சதசில் கேட்டது:

உபநயனம் சம்ஸ்காரம் மூலம் சந்தியாவந்தனம் செய்ய அதிகாரம், அதன் மூலம் வேத அத்யாயணம். சந்தியா வந்தனம் தினமும் செய்ய வேண்டும். பிராத சமயத்தில். செய்ய வேண்டும். யார் கர்ம அனுஷ்டானம் செய்கிறார்களோ,  தினம் செய்யும் தோஷம் விலகும். அர்க்ய பிரதானம் முக்கியம். மந்திரங்கள் வஜ்ராயதம்  போல் நம்மை காக்கும்.

தர்ம சாஸ்திரம் 

ஞானத்தை தருவதே வித்யா. அதன் வரிசையில் முதல் இருப்பது தர்ம சாஸ்திரம். பிரவித்தி, நிவரித்தி தர்மம் உண்டு. ஸ்மார்த்த தர்மம் உள்ளது .

ஆஸ்ரம தர்மம் நான்கு உள்ளது. அதை அவரவர்களின் தர்மம் படி, பின்பற்ற வேண்டும். நமது தர்மம், நமது ஆஸ்ரம தர்மம் பின்பற்ற வேண்டும். அவரவர் குண தர்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நியமம் உண்டு. நித்ய கர்மத்தை செய்வது முக்கிய தர்மம். நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் பக்தி, ஶ்ரத்தை தேவை.

Scroll to Top