காஷ்மீருக்கு திரும்பி செல்லுங்கள் Go back to Kashmir boldly

பல வருடங்களாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டு. வெளி மாநிலத்தில் பணிபுரியும் தம்பதியர்கள், ஆச்சாரியாள் அவர்களின் தரிசனம் காண வந்திருந்தார்கள். வந்தவர், “காஷ்மீர் நகருக்கு மாற்றம் ஆகி உள்ளது ” என்றார். காஷ்மீர் நகரம் திரும்பிப் போக வேண்டுமா என்ற கேள்வி வந்தவர் முன் விடை தெரியாமல் இருந்து கொண்டு உள்ளது.

பல வருடங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவிய பதற்ற சூழ்நிலையால் மாநிலத்தை விட்டு, வீடு, நிலம், சொத்து அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறினார்கள். பல, பலர் அழிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல், ஆச்சாரியாள் முன் நிற்க, அவர் கூறினார், “தைரியமாக செல்லுங்கள்.நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும்.

பணம், பொருளாதாரம், வசதி தேடி, பலர் தங்களின் வீடு,கிராமம் அனைத்தையும் விட்டு விட்டு வெளிநாடு, வெளிமாநிலம் என்று சென்று விட்டார்கள். ஆனால், காஷ்மீரில் மக்கள், குறிப்பாக காஷ்மீர் பண்டிதர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். கூடி சேர்ந்து வாழ்ந்த மக்கள் விரட்டப்படும் போது, அதனோடு மதம்,தர்மம், கலாச்சாரம், பாரம்பரியம் அனைத்தும் விரட்டப் பட்டு, அழிக்கப்படுகிறது.

நாம் நமது சொந்த கிராமம், ஊர் தாண்டிச் செல்லும் போது, நம்மால் நமது பழக்க வழக்கங்கள், விழாக்கள், பண்டிகைகள் அனைத்தையும் கடைபிடிக்க முயல்வதில்லை அல்லது நம்மால் கடைபிடிக்க கூடுதல் முயற்சி செய்ய வேண்டும்.
நாம் நமது மண், நமது குடும்பம், நமது சமுதாயம்,நமது நாடு அனைத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சி செய்ய வேண்டும் – தனியாக, கூட்டாக.

Expelled from the state of Kashmir for many years. A couple working in a different state had come to have the Acharya’s darshan. The visitor said, “Got transfer order to go back to Kashmir. The question of whether we should go back to city of Kashmir remains unanswered.”

Due to the tense situation in the state of Jammu and Kashmir for many years, they left the state, leaving behind all their homes, land and property. Standing before the Acharya, not knowing what to do in a situation where many, many were destroyed, His Holiness said, “Go boldly. You must all go back.“.

In search of money, economy and convenience, many people left their homes and villages and went to foreign countries. But people in Kashmir, especially Kashmiri Pandits, had different stories to tell. When people who have lived together are driven away, religion, dharma, culture and tradition are also driven away and destroyed.

When we move beyond our own village or town, we do not try to observe all our customs, ceremonies and festivals or we have to make an extra effort to observe them. Every individual must try to save our soil, our family, our society, our country – individually and collectively.

Scroll to Top